செய்திகள்

இது சுந்தர்.சி படமாச்சே?! கார்த்தியின் 'விருமன்' டிரெய்லர் எப்படி இருக்கிறது?

DIN

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். 

இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று(ஆகஸ்ட் 3) மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விழாவில் சூர்யா, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், அதிதி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்வின்போது இயக்குநர் ஷங்கர் விருமன் பட டிரெய்லரை வெளியிட்டார். இந்தப் பட டிரெய்லரும் வழக்கமான முத்தையா பட பாணியிலேயே இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. முரட்டுத்தனமான கிராமத்து ஹீரோவாக கார்த்தி, குடும்ப செண்டிமென்ட் என சமீபத்தில் வெளியாகும் கிராமத்து கொண்ட படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அதனை டிரெய்லரில் பார்க்க முடிகிறது.

படத்தில் கார்த்தியின் தந்தையான பிரகாஷ் ராஜுக்கும் கார்த்திக்குமான மோதல் தான் படத்தின் பிரதான கதையாக புரிந்துகொள்ள முடிகிறது. இது சுந்தர்.சி - பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்த 'வீராப்பு' படத்தின் கதையின் சாயலில் இருக்கிறது. அட்லி பாணியில் சொன்னால் இருப்பது 7 ஸ்வரம் தானே ! 

வீராப்பு படத்திலும் தந்தையாக பிரகாஷ் ராஜ் அவரது வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக சுந்தர்.சி, இருவருக்குமான மோதல் இதுதான் கதை. இந்தப் படம் மலையாளத்தில் மோகன்லால் நடித்த நரசிம்மம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அம்சங்களும் நிறைந்த விருமன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT