செய்திகள்

சமீபத்தில் தேசிய விருதுபெற்ற இயக்குநருக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த்

சமீபத்தில் தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குநருக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

DIN

சமீபத்தில் தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குநருக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். 

இயக்குநர் வசந்த்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்தது. சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கடிதம் மூலமாக இயக்குநர் வசந்த்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், ''மதிப்பிற்குரிய  இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்குநர்களில் வசந்த் மிக முக்கியமானவர். பாலசந்தர் சார் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்.

இயக்குநர் வசந்த் அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள். அவர் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே மிகவும் அருமையான படம் என்று சொன்னால் அது மிகையல்ல. 

பாரதி கண்ட புதுமைப் பெண்களான மூன்று பெண் கதாப்பாத்திரங்களை வைத்து மூன்று கதைகளாக்கி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இதை பார்த்தவர்கள் அனைவரும் இந்தப் படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரிமும் இல்லை. ஏனென்றால் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அந்த மூன்று கதாப்பாத்திரங்களும் நம் நெஞ்சை விட்டு அகலாது. 

இதுபோன்ற அருமையான படத்தை அளித்த வசந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

SCROLL FOR NEXT