செய்திகள்

''டைல்ஸ் பதித்ததால் தாய்மாமனை இழந்துவிட்டேன்'' - எச்சரிக்கும் நடிகர் நட்டி

நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் வீடுகளில் டைல்ஸ் பயன்படுத்துவது குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார். 

DIN

தமிழின் முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜன் 'சதுரங்க வேட்டை', 'நம்ம வீட்டு பிள்ளை', 'கர்ணன்' போன்ற படங்களில் ஹீரோ, வில்லனாக கலக்கிக்கொண்டிருக்கிறார். 

தற்போது மோகன்.ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' படத்தில் நட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் எச்சரிக்கை பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நட்டி எழுதியுள்ளார். அதில், ''டைல்ஸ், இது முதியோர்களின் எதிரி, சமீபத்தில் எனது தாய்மாமனை இழந்துவிட்டேன்.

காரணம் குளித்துவிட்டு வந்த உடன் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். நம்முடைய கௌரவம் டைல்ஸில் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். 

தமிழில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ள நட்டி, விஜய்யின் 'யூத்', 'புலி' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் 'ஜப் வி மெட்', தனுஷின் 'ராஞ்சனா' போன்ற பல ஹிந்தி படங்களுக்கு நட்டி ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஐபிஎல் எப்போது? ஏலத்துக்கு முன்பே வெளியான நற்செய்தி!

தூத்துக்குடி முதல் சென்னை வரை.. கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

விஜய் கூட்டத்துக்கு பாஸ் தேவையில்லை; அனைவரும் வரலாம்! செங்கோட்டையன்

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

2025-இன் சிறந்த வீராங்கனை: 25 ஆண்டுகால சாதனை பட்டியலில் இடம்பிடித்த சபலென்கா!

SCROLL FOR NEXT