தினமும் குடித்தால்தான் தூக்கம் வரும் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘பாம்பே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. தொடர்ந்து இந்தியன், முதல்வன், பாபா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் சிறிது காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் அவரின் மாமியாராக நடித்தார்.
இதையும் படிக்க: அஜித்துக்கு வில்லனாகும் தனுஷ்?
2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். அதன்பின், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்.
இந்நிலையில், மனிஷா கொய்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் “ சினிமாவில் தைரியமாக நடிப்பதற்காக மது அருந்தத் தொடங்கினேன். ஆனால், நாளடைவில் தினமும் குடித்தால்தான் தூக்கம் வரும் என்கிற அளவிற்கு அதற்கு அடிமையாக இருந்தேன். பின், புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.