செய்திகள்

10வது இடத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.. டிஆர்பி பட்டியல் வெளியீடு!

சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டிஆர்பி பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 

வார நாள்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர்
அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இரவு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

சமீபத்தில் ஒளிபரப்பாகும் சின்னத் திரை தொடர்களில் கிராமத்தைப் பின்னணியாக வைத்து திரைக்கதை அமைவது பெருமளவு குறைந்துள்ளது. இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. 

சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன், விஜே தீபிகா, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

முல்லை பாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா மறைவு இந்த தொடருக்கு பெரும் பின்னடைவு. எனினும் இந்த தொடர் விமர்சன ரீதியாக பலரிடம் சென்று சேர்ந்தது. இதில் நடித்து வரும் பாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால், இந்த தொடர் சலிப்பில்லாமல் நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT