செய்திகள்

துணிவு படத்தின் கேங்ஸ்டா பாடல் வெளியானது!

துணிவு படத்தின் 3ஆவது பாடலான கேங்ஸ்டா எனத் தொடங்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

DIN

துணிவு படத்தின் 3ஆவது பாடலான கேங்ஸ்டா எனத் தொடங்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

புதிய படத்தின் பாடல்கள் லிரீக் விடியோவாக வெளியிடப்படுவது வழக்கம்.

எனினும் துணிவு படத்தில் பாடல் லிரீக் விடியோவுக்கு முன்னதாக படத்தில் பாடல் வரிகள் வெளியானது. இசைமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பதிவில் இதனை வெளியிட்டு இருந்தார். ஏற்கெனவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படத்தின் 3ஆவது பாடலான கேங்ஸ்டா எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி கேங்ஸ்டா பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அஜித் ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர். அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில், தனக்கு எதிரியாக நிற்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. இது நேரடியாக விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT