செய்திகள்

விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் பங்கேற்ற கலகலப்பான 'பீஸ்ட்' முதல் பாடல் ப்ரமோ

விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் பங்கேற்ற கலகலப்பான 'பீஸ்ட்' முதல் பாடல் ப்ரமோ வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முக்கிய தகவல் இன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையடுத்து ட்விட்டரில் பீஸ்ட் அப்டேட், பீஸ்ட் முதல் பாடல் போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முதல் பாடல் ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரமோவில் நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அரபிக் குத்து என்ற முறையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.  டாக்டர் படம் போல இந்தப் படத்தின் பாடல்  ப்ரமோவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பீஸ்ட் படம் மிக முக்கியமானது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT