செய்திகள்

இயக்குநர் வினோத்துடன் அஜித் இருக்கும் புகைப்படம் வைரல்: விவரம் இதோ

இயக்குநர் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

நடிகர் அஜித்தின் வலிமை பட தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் நிலையில் ஒலி வடிவமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அப்போது நடிகர் அஜித் அங்கு சென்றுள்ளார். இயக்குநர் வினோத், சவுண்ட் என்ஜினியர் ஆகியோருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தற்போது படத்தின் இறுதிக்காட்சிக்கான ஒலி சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பின்னணி இசையை ஜிப்ரான் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவல் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்பிலிருந்தும் விளக்கமளிக்கப்படவில்லை. 

வலிமை படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஹுமா குரேஷி, யோகி பாபு, சுமித்ரா, விஜய் டிவி புகழ், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு துருவங்கள் ஒன்றிணைகையில்..! ரஜினி - கமல் படத்தின் புதிய அப்டேட்!

ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!

இந்தியப் பயணத்தை நிறைவு செய்து புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

திமுக - தேமுதிக கூட்டணி; கேப்டன் ஆன்மா மன்னிக்காது!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 19.2.2026

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?

SCROLL FOR NEXT