கால தபஸ்வி என ரசிகர்களால் அழைக்கப்படும் கன்னட நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 19) நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 89.
இதையும் படிக்க | குடித்துவிட்டு காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்ட தமிழ் பட நடிகை கைது
அவரது உடல் அவரது இல்லத்தில் இன்று மாலை அஞ்சலிக்காக வைக்கப்படும். அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் நடிகர் அர்ஜுனின் மனைவி ஆஷா ராணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக நடித்து வந்த ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.