செய்திகள்

சிம்புவை தொகுப்பாளராக்கவே பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து கமல்ஹாசன் நீக்கப்பட்டாரா ?

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தன. 

DIN

நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி, ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை சகலகலா வல்லவன் பட இளமை இதோ இதோ  பாடலுடன் கேக் வெட்டிக்கொண்டாடப்பட்ட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

விக்ரம் படப்பிடிப்பை பிரதான காரணம் காட்டியே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகினார். விலகுவதாக அவர் அறிவித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே விக்ரம் படப்பிடிப்பு முடிவடைந்தது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் சிம்புவை தொகுப்பாளராக்கவே, கமல் நிகழ்ச்சியிலிருந்து விலக்கப்பட்டார் என்றும் ஒரு தகவல் பரவிவருகிறது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT