செய்திகள்

தனுஷின் 'வாத்தி' படப்பிடிப்பு துவங்கியது: வெளியான புதிய போஸ்டர்

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 

DIN

அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்திருந்த அட்ராங்கி ரே படத்தின் தமிழ் பதிப்பான கலாட்டா கல்யாணம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன.

இந்த நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் அட்லுரி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்குகிறது. இதனை அறிவிக்கும் விதமாக வெளியான புதிய போஸ்டர் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

அகமதாபாத்தில் காமல்வெல்த் 2030! இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

ஆரோக்கியமாக வாழ ஆசையா? 10 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்

SCROLL FOR NEXT