நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நடிகர் அஜித் மும்பையிலுள்ள என்னுடைய தயாரிப்பு நிறுவன அலுவலகத்துக்கு வந்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் - துருவ்வின் மகான்
வலிமை திரைப்படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
வலிமை படத்தின் பின்னணி இசை வினோத்துக்கு பிடிக்காததால் யுவனுக்கு பதிலாக ஜிப்ரான் வலிமை படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.