பண்டிட் பிர்ஜு மகாராஜ்(கோப்புப்படம்) 
செய்திகள்

நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு காலமானார்.

DIN

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு காலமானார்.

சமீப காலமாக சீறுநீரகப் பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த பிர்ஜு(வயது 83) நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த பிர்ஜுவின் திறமையை அங்கீகரித்து இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

மேலும், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உனைக் காணாத’ என்ற கதக் நடனப் பாடலை பிர்ஜு தான் வடிவமைத்துள்ளார். மேலும், கமல்ஹாசனுக்கு கதக் கற்றுக் கொடுத்ததும் பிர்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT