செய்திகள்

இனி 24 மணி நேரமும் பிக்பாஸ்: பிக்பாஸ் அல்டிமேட் குறித்து சுவாரசிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி இனி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

DIN

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ராஜு அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் போலவே பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது.

பிக்பாஸ் போல் அல்லாமல் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும்.  பிக் பாஸ் வீட்டில் நாள் முழுவதும் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் காண முடியும். இந்த  நிகழ்ச்சியிலும் தாம்  பங்கேற்கவிருப்பதாக, இதுவரையிலான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரையிலான பிக்பாஸ் சீசன்களில்   கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும். முதல்கட்டமாக பிக்பாஸில் ஏற்கெனவே பங்கேற்ற வனிதா, அனிதா சம்பத், ஜுலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று  கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT