செய்திகள்

காதலா? காமமா? தீபிகா படுகோனேவின் ‘கெஹ்ரையான்’ டிரைலர் வெளியீடு

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவின் புதிய படமான ‘கெஹ்ரையான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவின் புதிய படமான ‘கெஹ்ரையான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கதாப்பாத்திரங்களை நேர்த்தியாக தேர்ந்தெடுக்கும் நடிகையான தீபிகா படுகோனே ’கெஹ்ரையான்’ படத்தில் நவீன மனங்களின் காதலை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

தற்போது வெளியான டிரைலரில் கவர்ச்சியான தோற்றத்தில் வருவதுடன் அதிக முத்தக்காட்சிகளிலும் நடித்துள்ளார் தீபிகா. மேலும், இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து பிகினி உடையில் வரும் தீபிகாவின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியமாக தோழியின் காதலனை காதலிக்கும் படியாக வெளியாகியிருக்கும் தீபிகாவின் காதல் தடுமாற்றக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஷகுன் பத்ரா இயக்கிய இப்படத்தில் தீபிகா படுகோனேவுடன் அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். 

’கெஹ்ரையான்’ வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT