செய்திகள்

இளையராஜாவின் முதல் மாணவன் லிடியன்: புகைப்படம் பகிர்ந்து நெகிழ்ச்சி

இளையராஜாவிடம் இசை பயின்று வருவதாக லிடியன் நாதஸ்வரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

DIN

லிடியன் நாதஸ்வரம் தனது இசைத் திறமையால் உலக அளவில் பிரபலமானவர். வேகமாக பியோனா வாசித்து சாதனை புரிந்திருக்கிறார். சிபிஎஸ் தொலைக்காட்சி சாதனையாளர்கள்  நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த கலைஞன் என்ற பட்டம் பெற்றவர். 

இதுமட்டுமல்லாமல் 14 இசைக் கருவிகளை வாசிக்கக் கூடியவர். தற்போது மோகன்லால் நடிக்கும் பரோஸ் என்ற படத்துக்கு லிடியன் இசையமைத்து வருகிறார். 

இந்த நிலையில் லிடியன் நாதஸ்வரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், ''என்னுடைய இசை ஆசிரியர் மேஸ்ட்ரோ இளையராஜா என்னிடம், நான் அவரது முதல் மாணவன் என்றார். அவர் ஒவ்வொரு நாளும் அன்பு மற்றும் அரவணைப்புடன் எனக்கு பயிற்றுவிக்கிறார். இதன உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT