செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தில் 3 நாயகிகள்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

DIN

'தமிழ் படம்' 1 மற்றும் 2 படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன். இவர் அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரத்தம்' படத்தை இயக்கி வருகிறார். வழக்கமான விஜய் ஆண்டனி படங்களைப் போலவே இந்தப் படத்துக்கும் எதிர்மறை தலைப்பு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் மஹிமா, ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். மூவரும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்று கூறப்படுகிறது.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் சார்பாக, கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தினன் முதல் பார்வையை பகிர்ந்த விஜய் ஆண்டனி நான் நல்லவனா கெட்டவனா என கேள்வி எழுப்ப, ரசிகர்கள் விதம் விதமான பதில்களை கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT