செய்திகள்

தனுஷுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா

தனுஷ் உடனான பிரிவுக்கு பிறகு தனிப் பாடலை ஐஸ்வர்யா இயக்கவிருக்கிறார்.  

DIN

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த வாரம் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தனுஷ் தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்புக்காக ஹைராபாத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் தனிப் பாடல் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பாடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படவிருக்கிறது. 

தற்போது இந்தப் பாடலின் முன்கட்ட தயாரிப்பு பணிகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகிறார். இந்தப் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைக்கவிருக்கிறார்.

இந்தப் பாடலை  பிரேமா வி அரோரா, பே ஃபிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர். இந்தப் பாடலை சின்னத்திரை நடிகர் சிவின் நாரங் தோன்றவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் இந்தியா, ரஷியா, சீனா கைகோக்கும்! ஜான் போல்டன் எச்சரிக்கை

அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

"பிரதமரால் முடியாதது..! எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்!": MK Stalin | செய்திகள்: சில வரிகளில் | 09.08.25

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT