செய்திகள்

ஸ்ருதி ஹாசனுக்கு பிரபாஸின் சலார் படக்குழுவின் பிறந்த நாள் பரிசு

பிரபாஸின் சலார் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் இடம்பெற்ற புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

DIN

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். 

ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஆத்யா என்ற வேடத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தப் படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக, ''படப்பிடிப்பு தளத்தில் சுறுசுறுப்பானவரும் எனது கதாநாயகி,  பிறந்த நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT