செய்திகள்

வந்தியத் தேவனாக கார்த்தி - பொன்னியின் செல்வன் 2வது போஸ்டர் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் தோற்றப் புகைப்படம் வெளியானது. 

DIN

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் தோற்றப் புகைப்படம் வெளியானது. 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனை முன்னிட்டு நடிகர்களின் தோற்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் முதலாவதாக இந்தப் படத்தில் பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலனாக நடித்த நடிகர் விக்ரமின் புகைப்படம் நேற்று (ஜூன் 4) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

ஆதித்த கரிகாலனின் தூதுவன் மற்றும் ஒற்றனாக வந்தியத் தேவன் சோழ தேசத்துக்குள் நுழைவார். ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் கதையும், அதிலிருக்கும் மர்மங்களும் அவர் வழியாகவே நமக்கு சொல்லப்படும். அதன்படி திரைப்படத்திலும் வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாப்பாத்திரம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனையடுத்து கதையின் நாயகன் ராஜராஜ சோழனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் தோற்றப் புகைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT