சினிமா நாயகிகளாகும் 'சுந்தரி' கேப்ரில்லா மற்றும் 'பாரதி கண்ணம்மா' வினுஷா : சீரியலிலிருந்து விலகுகிறார்களா?
சுந்தரி தொடரில் நடித்துவரும் கேப்ரியலாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவரும் வினுஷாவும் திரைப்படம் ஒன்றில் நாயகிகளாக நடித்துவருகின்னறனர்.
சுந்தரி தொடரில் நடித்துவரும் கேப்ரியலாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவரும் வினுஷாவும் திரைப்படம் ஒன்றில் நாயகிகளாக நடித்துவருகின்னறனர்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் கேப்ரியலா. ஐரா படத்தில் சிறு வயது நயன்தாராவாக சினிமாவில் அடியெடுத்துவைத்தார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தத் தொடர் மூலம் அவருக்கு ஏராளமான புகழ் கிடைத்தது. இவரைப் போலவே விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வினுஷா.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் களமிறங்கும் நடிகர் விஜய் - ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க புதுத் திட்டம்?
சின்னத்திரை தொடரிலிருந்து விலகுகிறார்களா ?
இருவரும் இணைந்து என்4 என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதை வினுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் சின்னத்திரை தொடர்களிலிருந்து விலகுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.