இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா பாதிப்பு இல்லை
பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது,
செய்திகள்இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா பாதிப்பு இல்லை
பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது,
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா தொற்று பாதிப்பில்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது
இன்று(ஜூலை 19) காலை, இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்றுக் காரனமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, ரகுமான், பாபு ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.
இதையும் படிக்க: 'இரவின் நிழல் சர்ச்சை' - ரசிகர்களிடம் மன்னிப்புகேட்ட பார்த்திபன்
பொன்னியின் செல்வன் பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.