செய்திகள்

'வாரிசு' விஜய்யுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா - புரியல?

விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். 

DIN

விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். 

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளாராம். 

குடும்ப கதையாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிக்கிறாராம். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.  ஜூலை 20 ஆம் நாளான நேற்று அவர் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில் அவர் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இணைந்தார். அவரது காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. 

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'குஷி' திரைப்படம் நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை விஜய்யே இசை பட விழாவில் தெரிவித்திருந்தார்.

மேலும் மெர்சல் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். 3வது முறையாக விஜய் - எஸ்.ஜே.சூர்யா 'வாரிசு' படத்துக்காக இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த மாநாடு, டான் படங்கள் பெரும் வெற்றியைப் பதிவு செய்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT