செய்திகள்

சமந்தா முன்னிலையில் நயன்தாராவை அவமதித்த இயக்குநர் - வெகுண்டெழுந்த ரசிகர்கள்

நயன்தாரா என் லிஸ்ட்டில் இல்லை என சமந்தாவிடம் இயக்குநர் கரண் ஜோகர் பதிலளித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நயன்தாரா என் லிஸ்ட்டில் இல்லை என சமந்தாவிடம் இயக்குநர் கரண் ஜோகர் பதிலளித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. 

நிகழ்வில் சமந்தா திருமணம் குறித்து பேசியது வைரலானது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகர் என நீங்கள் நினைப்பது யார் ? என சமந்தாவிடம் கரண் ஜோகர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமந்தா சற்றும் யோசிக்காமல், நயன்தாராவுடன் நான் இப்பொழுது ஒரு படத்தில் நடித்துமுடித்தேன் என்றார். அதற்கு கரண் ஜோகர், அவர் என் பட்டியலில் இல்லை என பதிலளித்திருந்தார். 


இதனையடுத்து கரண் ஜோகர் நயன்தாராவை அவமதித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கரண் ஜோகருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் 75வது படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சமந்தா - நயன்தாரா இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT