ட்ரீம் வாரியர் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
ட்ரீம் வாரியர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ2’ படத்தின் டிரைலர் நேற்று (ஜூன்6) இரவு வெளியானது.
பாதாளத்தில் சிக்கிக்கொள்ளும் பயணிகளில் நயனதாராவும் அவரது குழந்தையும் இருக்கிறார்கள். அதிலிருந்து எப்படி தப்பிப்பார்கள் என்பது போல காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படம் ஜூன் 17 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.