'எனக்கும் கார் வேண்டும்': தயாரிப்பாளரிடம் பிரபல இயக்குநர் கோரிக்கை
விக்ரம் படத்துக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசளித்ததையடுத்து பிரபல நடிகரும் இயக்குநரும் தங்களுக்கு கார் வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
'விக்ரம்' படத்துக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசளித்ததையடுத்து பிரபல நடிகரும் இயக்குநரும் தங்களுக்கும் கார் வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்தப் படம் வெளியான 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகிழ்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு கார் மற்றும் உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் இரு சக்கர வாகனங்களை பரிசளித்தார்.
இதையும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது: பிரபலங்கள் பங்கேற்பு
ரோலெக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யா இந்தப் படத்துக்காக சம்பளம் பெற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
.இந்த நிலையில் இதனைப் பகிர்ந்த தமிழ் படம் இயக்குநர் சி.எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் சஷி காந்த்தை குறிப்பிட்டு மறைமுகமாக கார் கேட்டுள்ளார்.
அவருக்கு பதிலளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், தமிழ் படத்தில் மங்காத்தா பாணியில் நடிகர் சதிஷ் பணத்துடன் இருக்கும் புகைப்படத்தையும். கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷிற்கு கார் பரிசளிக்கும் படத்தையும் பகிர்ந்து, முதல் படத்திலிருப்பது போல எங்களுக்கு பணம் அளியுங்கள். இரண்டாவது படத்தில் உள்ளது நிச்சயம் நடக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இது கைதி 2-வில் விரிவாக விவரிக்கப்படும்: லோகேஷ் கனகராஜ் ட்விஸ்ட்
இதனைப் போலவே நடிகர் சதிஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவைக் குறிப்பிட்டு ''கணம்; படத்தில் எனது பெயர் ;லோல்ஸ் ராய்ஸ்'' என்று தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ''எங்கள் ஊரில் திருவிழா வருகிறது சகோ, அதுல வாங்கி வச்சிடுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.