செய்திகள்

பெண் குழந்தைக்கு அம்மாவான நடிகை பிரணிதா: புகைப்படம் பகிர்ந்து மகிழ்ச்சி

நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.  

DIN

நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.  

அருள்நிதி நடித்த உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரணிதா. பின்னர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். 

தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் பிரணிதா நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரணிதா நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணமாகியிருந்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரணிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று (ஜுன் 10) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடக்கம்: படிவம் வழங்குதலை ஆய்வு செய்த ஆட்சியா்

முட்டை விலை நிலவரம்

ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் தனியாா் உணவகத்தில் மின்தூக்கியில் சிக்கி தவித்த 2 போ் மீட்பு

SCROLL FOR NEXT