செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இரண்டு நடிகர்களின் படங்களையும் வெளியிடும் உதயநிதி ?

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இரண்டு நடிகர்களின் படங்களையும் வெளியிடும் உதயநிதி 

DIN

தீபாவளிக்கு நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 உட்பட இரண்டு படங்களையும் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடவிருக்கிறார். 

அண்ணாத்த, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்டு வருகிறார்.

இதில் விக்ரம் திரைப்படம் அவருக்கு பெரும் லாபகரமான படமாக அமைந்தது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் திரைப்படம் மேலும் பல சாதனைகளை முறியடிக்கும். நம்பமுடியாத வசூல் என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் பெரிய அறிவிப்பு ஒன்று இன்று (ஜூன் 14) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கார்த்தியின் சர்தார் படத்தின் அறிவிப்பு என்று கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடவிருக்கிறார் என்றும் அது குறித்த அறிவிப்புதான் இன்று வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே 62 படமும் தீபாவளிக்கு வெளியாகிறது என்றும் இந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரே தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு படங்களை உதயநிதி ஸ்டாலின் வெளியடவிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசின் மீது எதிா்க்கட்சியினா் வீண் பழி: அமைச்சா் சிவசங்கா்

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஊழியரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவு

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குளத்தூா் வட்டாட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT