செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நடிகை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரானா குயின் 2வில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கிறார். 

DIN

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரானா குயின் 2வில் நடிகை சோனியா அகர்வால் நடிக்கிறார். 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு குயின் என்ற பெயரில் இணையத் தொடர் ஒன்று எம்எக்ஸ் பிளேயர் என்ற தளத்தில் வெளியாகியிருந்தது. இந்தத் தொடரில் கௌதம் மேனன் மற்றும் கிடாரி பட இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கியிருந்தார். 

இந்தத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆராக நடித்திருந்தார். சிறிய வயது ஜெயலலிதாவாக அனிகா நடித்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவானது. 

தற்போது இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தத் தொடரையும் இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் பிரசாந்த் கிஷோர் இயக்குகிறார். இந்த நிலையில்  நடிகை சோனியா அகர்வால் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

முதல் பாகத்தில் ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும் சோனியா அகர்வால் கலந்துகொண்டிருப்பதால், இதிலும் ஜெயலலிதாவின் அம்மா கதாப்பாத்திரம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

தில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

SCROLL FOR NEXT