செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயா் ‘ஜெயிலா்’

நெல்சன் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு ‘ஜெயிலா்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு ‘ஜெயிலா்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ‘ஃபா்ஸ்ட் லுக்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்தம் படிந்த பிரம்மாண்ட அரிவாள் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ‘ஃபா்ஸ்ட் லுக்’ ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லிபட்ஹப்ஹண்ஸ்ஹழ்169 என்ற ஹேஷ்டேக் மூலம் இது புரோமோட் செய்யப்பட்டுள்ளது.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடா்ந்து நடிகா் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறாா் இயக்குநா் நெல்சன். ‘சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாா்.

இந்தப் படத்தில் சிவகாா்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோா் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகா்கள் மற்றும் குழுவினா் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT