செய்திகள்

தனுஷைப் பாராட்டுகிறேன் - ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இளையராஜா

ட்விட்டர் பக்கதத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பதிலளித்தார். 

DIN


ட்விட்டர் பக்கதத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பதிலளித்தார். 

இளையராஜா தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்துக்கு இசையமைத்துள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

மேலும் சென்னை கோவையில் இசைக் கச்சேரிகள் நடத்திய இளையராஜா அடுத்ததாக மதுரையில் இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பாடல்கள் பாடவிருக்கிறார். 

இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்தார். ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடல் தனியாக வெளியிட வேண்டும் என ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். 

அவருக்கு பதிலளித்த இளையராஜா, ''ஒருவர் இசையமைத்து உங்கள் மனதில் அந்தப் பாடல் நிற்கிறது என்றால் அது இசையமைத்தவரின் திறமை. ஒரு இசை உங்கள் மனதை தொடுகிறது என்றால் அதுதான் உயர்ந்த கலை படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். உங்களின் இதயத்தை தொட்டதற்காக தனுஷை பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT