சின்னத்திரை தொடர்களில் சமீப காலமாக இவருக்கு பதில் இவர் என்ற வார்ததையை அடிக்கடி காணமுடிகிறது. ஒரு நடிகரை ரசிகர்கள் ரசிக்க துவங்கும்போது அந்த நடிகரை மாற்றிவிடுகிறார்கள்.
இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய மாற்றம் நிகழப்போகிறது. பாக்கியலட்சுமியின் மகனாக செழியன் என்ற வேடத்தில் நடித்து வரும் ஆர்யன் அந்தத் தொடரிலிருந்து விலகவிருக்கிறார்.
இதையும் படிக்க | 'பீஸ்ட்' படத்தின் முக்கிய புகைப்படம் கசிந்ததால் பரபரப்பு
தொடரில் தனது கதாப்பாத்திரத்துக்கு போதிய முக்கியத்துவம் இல்லையென்ற காரணத்தால் அவர் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறு யார் அந்த வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.
ஆர்யன் சமீபத்தில் செம்பருத்தி தொடரில் நடிக்கும் ஷபானாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ஆர்யன் தொடரிலிருந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.