செய்திகள்

'பீஸ்ட்' படத்தின் முக்கிய புகைப்படம் கசிந்ததால் பரபரப்பு

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து முக்கிய காட்சியின் புகைப்படம் ஒன்று கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்தப் படத்திலிருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. படத்தொகுப்பு பணியின்போது இந்தப் படம் கசிந்திருக்கலாம். அதில் ஃபோனில் பேசிக்கொண்டிருக்க பின்னணியில் குதிரைகள் மேய்ந்தபடி இருக்கின்றன. இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களிலிருந்து தயாரிப்பு நிறுவனம்  நீக்கி வருகிறது. 

இந்தப் புகைப்படத்தை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களைப் போல இதிலும் 'ஐ ஆம் வெயிட்டிங்' என விஜய் சொல்வதுபோன்ற காட்சி இடம் பெறுமோ என்று ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். 

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையில் இந்தப் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம்: சாலைவலம் வரும் முதல்வர் ஸ்டாலின்

பட்டுப் பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

எதையும் செய்யறிவிடம் கேட்கலாம் என மெத்தனமாக இருக்கக் கூடாது: மு.க. ஸ்டாலின்

விஜய் பிரசாரம்! நாகையில் மின்தடை!

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

SCROLL FOR NEXT