சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கண்மணி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களுக்காக ஒரு பெரும் ரசிகர் கூட்டமே காத்து கிடக்கிறது.
நடிகை பிரியா பவானி ஷங்கரை போல செய்தி வாசிப்பாளருக்கும் இவருக்கும் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் கண்மணி தான் ஒரு சின்னத்திரை நடிகரை காதலிப்பதை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இதையும் படிக்க | ''நன்றி தம்பி'': சிவகார்த்திகேயனுக்கு பதிலளித்த விமல்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரில் நாயகனாக நடித்து வரும் நவீன் குமாரை இவர் காதலிக்கிறாராம். இதனையடுத்து நவீன் மற்றும் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குடும்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதயத்தை திருடாதே நவீனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்மணி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.