செய்திகள்

'இன்று மட்டுமல்ல...'' - நயன்தாராவின் படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினத்தையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

DIN

மகளிர் தினத்தையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

''இது நம் வாழ்க்கையில் உள்ள பெண்ணுக்காக. அவர்கள் நம்மை உருவாக்குபவர்கள், நம்மை முழுமை அடையச் செய்பவர்கள். நம் வாழ்க்கை மற்றும் நாம் செய்யும் அனைத்துக்கும் அர்த்தம் அளிப்பவர்கள். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் அவர்களுடைய நாள்தான். 

செயல்கள் வார்த்தைகளை சத்தமாக பேசும். ஆகையால் இந்த இடத்தை நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்காக அழகான இடமாக மாற்றுவோம். அழகான, தைரியமான, உறுதியான, சிறப்பான பெண்கள் அனைருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தயாரித்து வருகிறார். 

மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தங்களது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக கனெக்ட், கவின் நடிக்கும் ஊர் குருவி உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர். இதில் கனெக்ட் திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்க நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT