செய்திகள்

''வாவ் செல்வா அத்தான்''.. செல்வராகவன் படத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட கருத்து

சமூகவலைதளத்தில் இயக்குநர் செல்வராகவன் பதிவிட்ட புகைப்படத்திற்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கமெண்ட் மூலம் பதிலளித்துள்ளார். 

DIN


சமூகவலைதளத்தில் இயக்குநர் செல்வராகவன் பதிவிட்ட புகைப்படத்திற்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கமெண்ட் மூலம் பதிலளித்துள்ளார். 

ராக்கி திரைப்படத்தை இயக்குய அருண் மாதேஸ்வரனின் அடுத்த படமாக சாணிகாயிதம் திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

சாணிகாயிதம் திரைப்படத்தில் செல்வராகவன் நடிப்பதாலும், அடுத்தடுத்து வெளியான அத்திரைப்படத்தின் புகைப்படங்களாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சாணிகாயிதம் படத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மற்ற்ஒரு புகைப்படத்தை செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கையில் துப்பாக்கியுடன் கருப்பு வெள்ளையில் வெளியான படத்திற்கு அவருடைய ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ''வாவ் செல்வா அத்தான்''... என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனுஷுடைய சகோதரரான செல்வாவின் புகைப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். 


இயக்குநராக தனக்கென தனி இடம் பிடித்து, தற்போது நடிப்பின் பக்கம் திரும்பியுள்ள செல்வாவின் முயற்சிக்கு எந்தவித வெறுப்புணர்வுமின்றி பாராட்டு தெரிவித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள் செல்லத் தடை!

மலர் சூட்டும்... சுவாதி கொண்டே

செங்குயிலே... சாந்தினி தமிழரசன்

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

ஒவியம்... தீப்ஷிகா!

SCROLL FOR NEXT