செய்திகள்

மாறன் தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன்: ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷின் மாறன் தொடர்பாக பதிவிட்ட கார்த்திக் நரேன் பின்பு நீக்கியுள்ளார். 

DIN

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்தப் படம் குறித்த அதிருப்தியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைட்டு, உண்மைய அப்றோம் சொல்றேன் என்று சொல்லியிருந்தார். 

அவரது பதிவு தனுஷ் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கார்த்திக் நரேன் தனது பதிவை உடனடியாக நீக்கினார். அவர் என்ன உண்மையைக் குறிப்பிட்டார் என்பது தொடர்பாக ரசிகர்கள் தங்களது யூகங்களை பதிவு செய்து வருகின்றனர். 

முன்னதாக இந்தப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதற்கு ஒப்பந்தமான பாடலாசிரியர் விவேக், கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ராம்கி, ஸ்மிருதி வெங்கட், ஆடுகளம் நரேன், சமுத்திரக்கனி, மகேந்திரன் கிருஷ்ண குமார், ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT