செய்திகள்

'வலிமை' பட பாதிப்பில் பைக்குகளை திருடிய கோவை இளைஞர்கள் கைது: அதிர்ச்சி சம்பவம்

வலிமை பட பாதிப்பில் பைக்குகளை திருடிய கோவை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

DIN


கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி யமஹா பைக் ஒன்று காணாமல்போனது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் இடையர்பாளையம் பகுதிய சேர்ந்த ஜீவானந்தம் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வலிமை படம் பார்த்த இருவரும், அந்தப் பட பாதிப்பில் பைக் திருட முடிவு செய்துள்ளனர்.  ஏற்கனவே 11 பைக்குகளை திருடி விற்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் கோவை சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் பைக்குகள் திருடுபோனது தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

17 வயது சிறுவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் ஜீவானந்தம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT