செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை

DIN

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. 

'பாகுபலி' படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கியுள்ள படம் என்பதால் இந்தப் படத்துக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் பெரும்பாலான படங்கள் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன. முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' திரைப்படம் 25 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் ஓடிடியில் சில படங்கள் வெளியாகின்றன. சமீபத்தில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வெற்றிபெற்றதை அடிப்படையாக வைத்து உருவான '83' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனையொட்டி வலிமை திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

'வலிமை' படத்துடன் வெளியான பவன் கல்யாணின் 'பீம்லா நாயக்' திரைப்படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இந்தப் படம் மலையாளத்தில் வெற்றிபெற்ற 'ஐயப்பனும் கோஷியும்' பட தெலுங்கு ரீமேக்காகும். 

அக்சரா ஹாசன் நடித்துள்ள 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தை எஸ்.குருமூர்த்தி இயக்கியுள்ளார். அக்சரா ஹாசனுடன் பிரபல பாடகி உஷா உதுப் முக்கிய வேடத்ததில் நடித்துள்ளார்.

டிரெண்ட் லவுட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற 25 ஆம் தேதி வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT