செய்திகள்

இளையராஜா - யுவன் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படம் வருகிற மே 6 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரித்துள்ளார். 

தர்மதுரை படத்துக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு இளையாராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 சார்பாக ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். இவர்தான் தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திலிருந்து தட்டிப்புட்டா மற்றும் நினச்சதொன்னு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT