செய்திகள்

தமிழ் சினிமாவில் களமிறங்கும் மற்றொரு நயன்தாரா

தமிழ் சினிமாவில் நயன்தாரா கலக்கிக்கொண்டிருக்கும்நிலையில் அதே பெயரில் மற்றொரு நடிகை களமிறங்குகிறார். 

DIN

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா. கதாநாயகர்களுக்கு நிகராக ரசிகர்களை கொண்டிருக்கிறார். அறம், கோலமாவு கோகிலா, மாயா என இவர் தனி கதாநாயகியாக நடித்த படங்கள் பெரும் வெற்றிபெற்று அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்துக்கு உயர்த்தியது.   

இந்த நிலையில் நயன்தாரா என்ற பெயரில் மற்றொரு நடிகை தமிழ் சினிமாவில் களமிறங்கவிருக்கிறார். இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவிருக்கிறது. 

முதல் பாகத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த மரகதமணி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கதாயாகியாக நயன்தாரா சக்கரவர்த்தி என்ற நடிகை அறிமுகாகவிருக்கிறார்.

இதனை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் மற்றொரு நடிகையும் முதன்மை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT