செய்திகள்

நாக சைதன்யாவை அன்ஃபாலோ செய்த சமந்தா: அப்படி என்ன ஆனது?

நாக சைதன்யாவை நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த அக்டோபரில் பிரிவதாக அறிவித்தனர். இதனையடுத்து இருவரது 4 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 

நடிகை சமந்தா தனது நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை நீக்கி வெறும் சமந்தா என்று மாற்றினார். மேலும் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கினார். 

இந்த நிலையில் நாக சைதன்யாவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகை சமந்தா அன்ஃபாலோ செய்துள்ளார். முன்னதாக நாங்கள் இருவரும் நண்பர்களாக தொடர்வோம் என நாக சைதன்யா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்

சமந்தா தற்போது 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் சமந்தா நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சகுந்தலம்', 'யசோதா' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT