செய்திகள்

சூர்யா - கார்த்தியை மனதில் வைத்து 'ஆர்ஆர்ஆர்' கதையை உருவாக்கிய ராஜமௌலி : சுவாரசியத் தகவல்

சூர்யா - கார்த்தியை மனதில் வைத்து ஆர்ஆர்ஆர் கதையை உருவாக்கியதாக இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். 

DIN


ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் இன்று(மார்ச் 25) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'பாகுபலி' படத்தின் வசூலை இந்தப் படம் மிஞ்சும் என திரைத்துறையினர் கணித்துள்ளனர். 

சுதந்திர போராட்ட பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, கீரவாணி இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில்  நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன், சூர்யா - காரத்தி ஆகியோர்களை மனதில் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியதாகவும், இறுதியாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை முடிவு செய்ததாகவும் ஆர்ஆர்ஆர் படத்தின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமௌலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT