செய்திகள்

'தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு?' - அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் ஆவேசம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார அலுவலர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது ஊடகங்கள் முன்பு புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்திக்கச் சென்றபோது அவர் தன்னை சாதி ரீதியாக வசைபாடியதாக கூறியிருந்தார். 

இதனையடுத்து போக்குவரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜகண்ணப்பன் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை பொறுப்பு, ராஜ கண்ணப்பனிடம் அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ராஜகண்ணப்பன் அமைச்சராக இருந்த போக்குவரத்துத் துறை, தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள் கொள்முதல் விவகாரத்தில் தனியார் நிறுவனத்தை நாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. 

அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு ? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம் (அயோக்கியத்தனம்) சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார். அறியாதவன் திரு.ராஜ கண்ணப்பன் ஆகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக மேலாண்மை படிப்புகளுக்கான ஆன்லைன் பயிற்சி: எப்படி விண்ணப்பிப்பது?

சிவராஜ் பாட்டீலின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்புத் தலைவராகிறார் ஸ்ரீகாந்த் அக்காபள்ளி!

மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு? நேருவைத் தொடர்ந்து காந்தியையும் வெறுக்கும் பாஜக! - ஜெய்ராம் ரமேஷ்

ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி!

SCROLL FOR NEXT