செய்திகள்

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு புதுச்சேரியில் வரிவிலக்கு

DIN

‘தி காஷிமீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு கேளிக்கை வரிவிலக்கை அறிவித்துள்ளது.

ஹிந்தியில் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990-ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திரைப்படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விமர்சனங்களும், ஆதரவும் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜகவினர் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு  பாஜகவினரின் கோரிக்கையை ஏற்று ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க உத்தரவு வழங்கியுள்ளது.

முன்னதாக உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், கோவா, கர்நாடகம், ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT