செய்திகள்

கூட்டத்தை தவிர்க்க அதிகாலையில் சாமி தரிசனம் செய்த அஜித்: வைரலாகும் புகைப்படம்

கேரள மாநில கோவிலில் நடிகர் அஜித் குமார் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

DIN

'வலிமை' படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் 'ஏகே 61' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது. 

இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையவிருக்கின்றனர். 'வலிமை' படத்தின்போது யுவனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்துக்கு ஜிப்ரான்தான் பின்னணி இசையமைத்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் அஜித் கேரள மாநில கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துள்ளார். வெள்ளை வேட்டி அணிந்து எளிமையாக இருந்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் குமாருடன், கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அடுத்ததாக லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT