‘காலத்துக்கும் நீ வேணும்’ : வெந்து தணிந்தது காடு திரைப்பட பாடல் வெளியீடு 
செய்திகள்

‘காலத்துக்கும் நீ வேணும்’ : வெந்து தணிந்தது காடு திரைப்பட பாடல் வெளியீடு

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் காலத்துக்கும் நீ வேணும் எனும் பாடல் வெள்ளிக்கிழமை வெளியாது.

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் காலத்துக்கும் நீ வேணும் எனும் பாடல் வெள்ளிக்கிழமை வெளியாது.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உடன் நடிகர் சிலம்பரசன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரித்துள்ளது. 

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது முதல் பாடலை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். காலத்துக்கும் நீ வேணும் எனும் இந்தப் பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.  நடிகர் சிலம்பரசன் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் உள்ளிட்டோர் பாடலைப் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT