துல்கர் நடித்த சீதா ராமம்: பாடல் வெளியீடு
துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான், மிருனாள் தாக்குர், ராஷ்மிகா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சீதா ராமம். இசை - விஷால் சந்திரசேகர்.
இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் துல்கர் சல்மான். ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடலின் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை எஸ்.பி.பி. சரண், சிந்தூரி பாடியுள்ளார்கள்.