செய்திகள்

இந்தி சினிமாவின் மிக நீண்ட சண்டைக்காட்சி

புது தில்லி: இந்தி சினிமாவின் நீண்ட சண்டைக் காட்சியுள்ள படமாக தான்  நடித்த படம் இருக்குமென்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 

DIN

புது தில்லி: இந்தி சினிமாவின் நீண்ட சண்டைக் காட்சியுள்ள படமாக தான்  நடித்த படம் இருக்குமென்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 

ரஜ்னீஷ் காய் இயக்கத்தில் சோஹாம் ராக்ஸ்டார் என்ட்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஏஜென்ட் அக்னி எனும் கதாப்பாத்திரத்தில் கங்கனா ரணாவத், அர்ஜுன் ராம்பால் உடன் நடித்த படம் 'தாக்ட்'.

கங்கனா இதில் முதன்மையான கதாபாத்திரமாக நடித்துள்ளார். இந்தியாவின் ப்ளாக் விடோவ் என்று அழைக்கப்படும் அளவுக்கு இதில் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

பேட்டியில் கங்கனா "மணிகர்ணிகா படத்தில் நான் போலியான ஆய்தங்கள் வைத்து நடிக்கும் போது காயம் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய இயக்குநர் உண்மையான ஆயுதங்களை வைத்தே படப்பிடிப்பு நடத்தினார். நான் சிறு வயதில் இருந்தே எனது சண்டைப் பயிற்சியாளர் சூர்ய நாராயணன் ஜி அவர்களிடம் பயின்று வந்துள்ளேன். ஆனால் எனக்கு சில படங்களில் மட்டுமே அப்படியான வாய்ப்பு கிடைத்தது. இப்படத்திற்காக ஹாலிவுடில் இருந்து சிறப்பாக அழைத்து வந்து பயிற்சி கொடுத்துள்ளனர்.இந்தி சினிமாவிலே இது தான் நீண்ட சண்டைக் காட்சியுள்ள படமாக இருக்கும் அதாவது கிட்டத்தட்ட 14 நிமிடங்கள் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் மே 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

SCROLL FOR NEXT