கோப்புப்படம் 
செய்திகள்

கேஜிஎஃப் 3 படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்

கேஜிஎஃப் 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

DIN


கேஜிஎஃப் 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கிய கேஜிஎஃப் 2 மொத்தம் 1,100 கோடிக்கும் மேல் வசூலாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் முடிவில் 3-ம் பாகத்திற்கான தொடக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கேஜிஎஃப் 3 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது.

இந்த நிலையில், கேஜிஎஃப் 3 குறித்து தயாரிப்பாளர் விஜய் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் பிரசாந்த் கூறியதாவது:

"பிரசாந்த் நீல் சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். 30 முதல் 35 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அது வரும் அக்டோபர் - நவம்பரில் நிறைவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எனவே, அக்டோபருக்குப் பிறகு கேஜிஎஃப் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். இதை 2024-இல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT